5866.

'என்னையும்வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு
                           இவன்-
தன்னையும்வெலற்கு அரிது எனக்கு; தாக்கினால்,
அன்னவேகாலங்கள் கழியும்; ஆதலான்,
துன்ன அருஞ்செருத் தொழில் தொடங்கல்
                           தூயதோ ?

     என்னையும்இவனுக்கு வெலற்கு அரிது - என்னை வெல்லுதலும்
இந்த இராவணனுக்கு அரியதாகும் (முடியாது); ஈண்டு - இவன் முன்னிலையில்;
இவன் தன்னையும் வெலற்கு எனக்கு அரிது - இவ்வளவு துணைவலிமை
உடைய இவனை வெல்லுதலும் எனக்கும் அரியதாகும் (முடியாது) (ஆகவே);
தாக்கினால் - இவனை எதிர்த்துப் போர் தொடங்கினால்; காலங்கள்
அன்னவே கழியும் -
பலகாலங்கள் அத்தாக்குதலாகவே கழிந்து விடும்;
ஆதலால் -
ஆகையால்; துன்ன அரும் செரு தொழில் துடங்கல்
தூயதோ? -
பிறர் நெருங்குதற்கு அரிய போர்த்தொழிலைத் தொடங்குவது
நல்லதோ ?(அன்று என்றபடி).

     போர்த்தொழில்தொடங்குதல் தூயது அன்று என்ற முடிவுக்கு வந்தான்
அனுமன்.                                                  (62)