5871.

புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடந்-
தவனை உற்று,'அரி உருவான ஆண்தகை,
சிவன் எனச்செங்கணான் எனச் செய் சேவகன்,
இவன்' எனக் கூறிநின்று, இரு கை கூப்பினான்.+

     புவனம் எத்தனைஅவை - உலகங்கள் எத்தனை உண்டோ அவை;
அனைத்தும் போர் கடந்தவனை உற்று -
எல்லாவற்றையும் போரில்
வென்றவனாகிய இராவணனை (இந்திரசித்து) அடைந்து; அரி உருவான
ஆண்தகை இவன் -
குரங்குவடிவில் உள்ள ஆண்மைக்குணமுடையவனான
இவன்; சிவன் என செங்கணான் என - சிவபிரான் போலவும் திருமால்
போலவும்; செய்சேவகன் - போர் செய்த சிறந்த வீரன்; என கூறி - என்று
எடுத்துச் சொல்லி; நின்று - எதிரே நின்று; இருகை கூப்பினான் - இரண்டு
கைகளையும் குவித்து வணங்கினான்.

    இ்ந்திரசித்துஅனுமனை இராவணனுக்கு அறிமுகப்படுத்திய முறை
கூறப்பட்டது.                                               (67)