இராவணன் அனுமனைச்சினந்து 'நீ யார்' என வினவுதல் 5872. | நோக்கியகண்களால் நொறில் கனல்-பொறி தூக்கிய அனுமன்மெய்ம் மயிர் சுறுக்கொள, தாக்கியஉயிர்ப்பொடும் தவழ்ந்த வெம் புகை வீக்கினன்,அவ்வுடல் விசித்த பாம்பினே. |
நோக்கியகண்களால் - (சினத்தோடு) பார்த்த(இராவணனது) கண்களினின்றும் உண்டான; நொறில் கனல் பொறி - விரைந்து சென்ற நெருப்புப் பொறிகள்; தூக்கிய அனுமன் மெய்மயிர் - (இந்திரசித்தால்) சிறப்பாகப் பேசப் பெற்ற அனுமனது உடலில் உள்ள உரோமங்கள்; சுறு கொள - சுறு சுறு என்று எரிந்து கருகும்படி; தாக்கிய - அனுமனை மோதிய; உயிர்ப் பொடும் தவழ்ந்த வெம்புகை - இராவணனது பெருமூச்சுக்களோடு தழுவிச் சென்ற வெவ்விய அனல் புகைகள்; அவன் உடல் விசித்த பாம்பின் வீக்கின - அந்த அனுமன் உடம்பைப் பிணித்திருந்த நாகபாசத்தைப் போலக் கட்டின. இராவணனதுபெருஞ்சினக்குறிப்பின் கடுமையும் வேகமும் கூறப்பட்டது என்க. நொறில் - வேகம்; வீக்குதல் - கட்டுதல். (68) |