| 5875. | 'நின்றுஇசைத்து உயிர் கவர் நீலக் காலனோ ? குன்று இசைத்துஅயில் உற எறிந்த கொற்றனோ ? தென் திசைக்கிழவனோ ? திசை நி்ன்று ஆட்சியர் என்றுஇசைக்கின்றவர் யாருள், யாவன் நீ ? |
நின்று இசைத்து -நிலைநின்று தனது பாசத்தால் கட்டி; உயிர்கவர் நீலக்காலனோ ? - பிராணிகளின் உயிரைப் பற்றிக் கொள்ளும் கருநிறமுள்ள காலனோ ?; குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ ? - கிரௌஞ்சகிரி என்னும் மலையில் பட்டு, தனது வேலாயுதம் உட்புகும்படி அதனைத் தாக்கிய வெற்றியை உடைய முருகக் கடவுளோ ?; தென் திசை கிழவனோ ? - தெற்குத் திசைக்கு உரியவனாகிய யமதர்மராசனோ?; திசை நின்று ஆட்சியர் - மற்றத்திக்குகளில் நின்று ஆளுதலை உடையவர்; என்று இசைக்கின்றவர் யாருள் நீயாவன் ? - என்று சொல்லப்படுகின்றவர் அனைவருள்ளும் நீ யார் ? காலன், தென்திசைக் கிழவன் என்று வேறாகக் கூறியது, காலன் என்பவன் யமனது ஆணையைச் செலுத்தும் ஒரு சேவகனே ஆவன் என்பதை விளக்க வந்தது காலன் - யமகிங்கரர்களின் தலைவன். (71) |