இராவணன், மேலும்சில வினாக்கள் தொடுக்க, அனுமன் நிகழ்ந்தமைவிவரித்தல் 5889. | 'என்னுடைஈட்டினால், அவ் வாலியை எறுழ் வாய் அம்பால் இன் உயிர்உண்டது ? இப்போது யாண்டையான் இராமன் என்பான் ? அன்னவன்தேவிதன்னை அங்கதன் நாடலுற்ற தன்மையைஉரைசெய்க' என்ன, சமீரணன் தனயன் சொல்வான்; |
இராமன் என்பான்- (அதுகேட்ட இராவணன்) இராமன் என்பவன்; என்னுடை ஈட்டினால் - எந்த வகையால் பெற்ற வலிமை கொண்டு; அவ்வாலியை - அந்த வாலியை; எறுழ்வாய் அம்பால் இன் உயிர் உண்டது - வலிய நுனியை உடைய அம்பால் அவன் இனிய உயிரை அழித்தது ?; இப்போது யாண்டை யான் - அந்த இராமன் இப்போது எங்கே இருக்கிறான் ?; அன்னவன் தேவி தன்னை அங்கதன் நாடல்உற்ற தன்மையை - அவனுடைய மனைவியாகியசீதையை (அவனால் கொல்லப்பட்ட வாலியின் மகனான) அங்கதன் தேடத் தொடங்கிய நிலைமையை (வகையை); உரை செய்க என்ன - சொல்வாயாக' என்று இராவணன் கேட்க; சமீரணன் தனயன் சொல்வான் - வாயுகுமாரனான அனுமான் அதற்குப் பின்வருமாறு மொழி கூறினான். இராவணன் கேட்டகேள்விகள் இரண்டு. ஒன்று வாலியைக் கொன்ற இராமபிரானைப் பற்றியது; மற்றொன்று, கொல்லப்பட்ட வாலியின் மகனாயிருந்தும் அங்கதன், இராமனது மனைவியைத் தேட வந்த நிலைமை பற்றியது. ஈடு - வலிமை. 'ஒருகரியீடழித்து' (தேவாரம்) எறுழ் - வலிமை உணர்த்தும் உரிச்சொல். சமீரணன் - நன்றாகச் சஞ்சரிப்பவன் என்னும் பொருளது வாயு தேவன். (85) |