5897. | ' " போய் இற்றீர், நும் புலன் வென்று போற்றிய வாயில் தீர்வுஅரிதாகிய மா தவம்- காயின் தீர்வுஅருங் கேடு அருங் கற்பினாள், தீயின் தூயவளைத்துயர் செய்ததால். |
காயின் தீர்வுஅரும் - தான் கோபித்தால் தடுக்க முடியாததும்; கேடு அரும் கற்பினாள் - அழியாததுமான பதிவிரதா தருமத்தை உடையவளும்; தீயின் தூயவளை - நெருப்பினும் தூய்மை உடையவளுமான பிராட்டியை; துயர் செய்ததால் - நீர் துன்பப்படுத்தியதால்; நும்புலன் வென்ற போற்றிய - உமது ஐந்து புலன்களையும் வென்று அடக்கிக் காத்து வந்ததும்; வாயில் தீர்வு அரிதாகிய மாதவம் போய் இற்றீர் - வாயில் சொல்லி அடங்காத பெருமை உடையதுமாகிய பெரிய தவத்தின் பயனை உங்களை விட்டு நீங்கி ஒழியப் பெற்றீர்கள். கற்பு, தீர்வுஅரியது; கேடு அரியது, மாதவம் போற்றியது; அரிதாகியது. கற்புடைத் தூயவளுக்குத் துன்பம் இழைத்ததால், தவத்தின் பயன் போயிற்று என்றவாறு. (93) |