| 5899. | ' "தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது" எனும் வாய்மை நீக்கினை; மா தவத்தால் வந்த தூய்மை,தூயவள்தன்வயின் தோன்றிய நோய்மையால்துடைக்கின்றனை; நோக்கலாய் ! |
தீமை நன்மையைதீர்த்தல் ஒல்லாது - 'பாவமானது நல்ல அறங்களைஅழிக்கும் வன்மை உடையது அன்று'; எனும் வாய்மை நீக்கினை - என்றுசொல்லப்படுகின்ற ஆன்றோர் மொழியையும் மனம் கொள்ளாது அகற்றிவிட்டாய்; நோக்கலாய் - ஒன்றும் சிந்திக்காதவனாய்; மாதவத்தால் வந்த தூய்மை - பெரிய தவத்தைச் செய்ததனால் உனக்கு வந்த தூய்மைநிலையை; தூயவள் தன் வயின் தோன்றிய - கற்பின் தூய்மை உடைய சீதா பிராட்டியின் திறத்து உண்டான; நோய்மையால் துடைக்கின்றனை - காம நோயினால் அழித்துக் கொள்கின்றாய். 'அறம் வெல்லும்பாவம் தோற்கும்' என்பதை அடி ஒற்றியது, 'தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது' என்ற தொடர். (95) |