5902. | ' "பொருளும், காமமும், என்று இவை போக்கி, வேறு இருள் உண்டாம்என எண்ணலர்; ஈதலும், அருளும், காதலின்தீர்தலும், அல்லது, ஓர் தெருள் உண்டாம்என எண்ணலர்-சீரியோர். |
சீரியோர் -அறவொழுக்கங்களில் சிறந்த மேலோர்; பொருளும் காமமும் என்று இவை போக்கி - செல்வத்தில் ஆசையும், சிற்றின்பமான காமத்தில் ஆசையும் ஆகிய இவற்றைத் தவிர்த்து; வேறு இருள் உண்டு ஆம் என எண்ணலர் - வேறே இருள் ஒன்று (உலகத்தில்) உள்ளது என்று நினையார்; ஈதலும், அருளும் - வறியோர்க்குக் கொடுத்தலும், யாரிடத்தும் கருணை காட்டலும்; காதலின் தீர்தலும் அல்லது - அப்பொருளினிடத்தும் சிற்றின்பத்தினிடத்தும் பற்று விட்டு நீங்குதலும் ஆகிய இவையே அல்லாமல்; ஓர் தெருள் உண்டு ஆம் என எண்ணலர் - வேறு ஒரு நல்லறிவு உள்ளது என்று நினையார். பொருளும் காமமும்இருள்; ஈதலும், அருளும், காதலின் தீர்தலும் தெளிவு தருவன. (98) |