5906.

' "பாரை ஞூறுவ பற் பல பொற் புயம்,
ஈர்-ஐஞ்ஞூறு தலைஉள; என்னினும்,-
ஊரை ஞூறும் கடுங்கனல் உட்பொதி
சீரை ஞூறு,அவை-சேமம் செலுத்துமோ ?

     பாரை ஞூறுவ பற்பலபொன் புயம் - உலகங்களை அழிக்கவல்ல
மிகப்பல அழகிய கைகளும்; ஈர் ஐஞ்ஞூறு தலை உள என்னினும் -
ஆயிரம் தலைகள் உனக்கு உள்ளன என்றாலும்; அவை சேமம்
செலுத்துமோ -
அவை, உன்னைப் பாதுகாக்க வல்லனவோ ? (வல்லனஅல்ல);
அவை - (ஆனால்) அவைதாம்; ஊரை ஞூறும் கடும் கனல் உள்
பொதிஞூறு சீரை -
ஊர் முழுவதையும் அழிப்பதாய் வளர்ந்த கொடிய
நெருப்பின் உள்ளே அகப்பட்ட நூறு சீலைகளே போலும்.

    ஆயிரம் தலைகளும்பல கைகளும் உண்டானாலும் அவை உன்னைப்
பாதுகாக்கமாட்டா; அவை யாவும், நெருப்பில் பட்ட சீலைப் பொதி போல
இராமபிரானது  அம்பினால் எளிதில்அழிந்து விடும் என்பதாம்.      (102)