5909. | ' "பிறந்துளார், பிறவாத பெரும் பதம் சிறந்துளார்,மற்றும் தேவர்க்கும் தேவர் ஆய் இறந்துளார்,பிறர் யாரும், இராமனை மறந்துளார் உளர்ஆகிலர்; வாய்மையால். |
பிறந்துளார் -உலகில்நற்பிறவியில் பிறந்துள்ளவர்களும்; பிறவாத பெரும் பதம் சிறந்துளார் - பிறப்பற்ற வீட்டினைப் பெற்றுச் சிறந்தவர்களும்; மற்றும் தேவர்க்கும் தேவராய் இறந்துளார் - மற்றும் தேவாதி தேவர்களாகிமேம்பட்டவர்களும், ஆகிய; பிறர் யாரும் - (உன்னை ஒழிந்த) மற்றையோர்அனைவரும்; இராமனை மறந்துளார் உளர் ஆகிலர் - இராமபிரானைமறந்துள்ளவர்களாய் உள்ளவரே இல்லை; வாய்மை - இது சத்தியம் இராவணனுக்குஇராமபிரானின் பெருமை உணர்த்தப்பட்டது. பெரும் பதம் - பரம பதம்; இறத்தல் - கடத்தல்; இறந்துளார் - கடவுளர் என்றபடி. (105) |