இராவணன் நகைத்துதூதனாகிய நீ
                    அரக்கரைக்கொன்றது ஏன்? என்றல்

5911.

என்றலும்,'இவை சொல்லியது, எற்கு, ஒரு
குன்றின் வாழும்குரங்குகொலாம் !  இது
நன்று ! நன்று !என மா நகை செய்தனன்-
வென்றி என்றுஒன்றுதான் அன்றி வேறு இலான்.

     என்றலும் -என்றுஅனுமன் கூறியவுடன்; வென்றி என்று ஒன்று
தான் அன்றி வேறு இலான் -
வெற்றி என்று சொல்லப்படும் ஒன்றுதானே
அல்லாமல், அதற்குமாறான தோல்வியை (இது நாள் வரை) அறியாதவனான
இராவணன்; இவை எற்கு சொல்லியது - இச்செய்திகளை எனக்குச்
சொன்னது; குன்றின் வாழும் குரங்கு கொல் ஆம் - மலையில் திரிந்து
வாழும் ஒரு அற்பக் குரங்கு போலும் !; இது நன்று நன்று என மாநகை
செய்தனன் -
இது நன்றாய் இருக்கிறது என்று சொல்லி பெருஞ்சிரிப்புச்
சிரித்தான்.

      நன்று நன்று;அடுக்கு இகழ்ச்சிக்குறிப்பு.                    (107)