5928. 

ஒக்க ஒக்கஉடல் விசித்த உலப்பு இலாத உரப்
                           பாசம்,
பக்கம் பக்கம்இரு கூறு ஆய், நூறாயிரவர்
                           பற்றினார்;
புக்க படைஞர்புடை காப்போர் புணரிக் கணக்கர்;
                           புறம் செல்வோர்,
திக்கின்அளவால்; அய் நின்று காண்போர்க்கு
                    எல்லை தெரிவு அரிதால்.

     ஒக்க ஒக்க உடல்விசித்த - பல ஒன்று சேர்ந்த,அனுமனது
உடலைக்கட்டிய; உலப்பு இலாத உரம் பாசம் - அழிவு இல்லாத வலிமை
உடையகயிறுகளை; பக்கம் பக்கம் இரு கூறு ஆய் - இரு பக்கங்களிலும்
இரண்டுபிரிவுகளாக; நூறு ஆயிரவர் பற்றினார் - நூறு ஆயிரம் (இலட்சம்)
அரக்கர்கள் பிடித்துக் கொண்டார்கள்; புக்க புடை காப்போர் படைஞர் -
அவர்களுடன் வந்த பக்கங்களிலிருந்து பாதுகாப்பவர்களாகிய ஆயுத
பாணிகள்; புணரிக் கணக்கர் - சமுத்திரம் என்னும் தொகை அளவினர்; புறம்செல்வோர் திக்கின் அளவு - அவர்களின் பக்கங்களில் சூழ்ந்து
வருபவர்கள், திக்குகளின் அளவு வரை உள்ளவர்; அயல் நின்று காண்
போர்க்கு எல்லை தெரிவு அரிது -
அதற்கும் அப்பால் நின்று வேடிக்கை
காண வருபவர்க்கு அளவு அறிய ஒண்ணாதது.

     அனுமனை இழுத்துச்செல்லும் போது அங்கு கூடிய அரக்கர்களின்
தொகை, நான்கு வகையாகக் கூறப்பட்டது. புணரிக் கணக்கு இருபத்தாறு
தானம் உடைய சமுத்திரம் என்ற எண்.                         (124)