மாளிகைகளில்தீப்பற்ற மாந்தர் பூசலிட்டு ஓடுதல் கலி விருத்தம் 5943. | கொடியைப்பற்றி, விதானம் கொளுவி, தான் நெடிய தூணைத்தழுவி, நெடுஞ் சுவர் முடியச் சுற்றி,முழுதும் முருக்கிற்றால்- கடிய மாமனைதோறும் கடுங் கனல். |
கடும் கனல் -(அனுமன்வாலில் இட்ட) கொடிய நெருப்பு; கடிய மாமனை தோறும் - காவலை உடைய பெரிய மாளிகைகளில் எல்லாம்; கொடியைப் பற்றி - கொடிகளைப்பற்றிக்கொண்டும்; விதானம் கொளுவி - மேற் கட்டிகளைஎரித்தும்; நெடிய தூணை தழுவி - உயர்ந்த தூண்களைச் சூழ்ந்தும்; நெடுஞ்சுவர் முடிய சுற்றி - நீண்ட சுவர்களை முழுவதும் சுற்றிக் கொண்டும்;முழுதும் முருக்கிற்று - அம்மாளிகைகள் முழுவதையும் எரித்து அழித்தது; முருக்கிற்று -அழித்தது; கடி - காவல்; கனல் - நெருப்பு; தான், ஆல்; அசைகள். (1) |