| 5957. | தழுவு இலங்கை தழங்கு எரி தாய்ச் செல, வழு இல் வேலைஉலையின் மறுகின; எழும் எழும்சுடர்க் கற்றை சென்று எய்தலால், குழுவு தண் புனல்மேகம் கொதித்தவே. |
இலங்கை தழுவுதழங்கு எரி - இலங்கை நகரைச்சூழ்ந்து ஒலி முழக்கம் செய்யும் நெருப்பு; தாய் செல - தாவித் தாவி பரந்ததனால்; வழு இல் வேலை உலையில் மறுகின - அந் நகரத்தைச் சுற்றியுள்ள குற்றம் இல்லாத கடல், உலைநீர் போல மிகவும் கொதித்தன; எழும் எழும் சுடர் கற்றை - மேலும் மேலும் எழுந்த ஒளித் தொகுதிகள்; சென்று எய்தலால் - மேலே சென்று வீசுவதால்; குழுவுதண் புனல் மேகம் கொதித்த - வானத்திலே திரண்டுள்ள குளிர்ச்சியான நீரை உடைய மேகங்களும் கொதிப்படைந்தன. இலங்கையைச்சுற்றியுள்ள கடல் நீரும், அந்நகரின் மீதாக உள்ள மேக நீரும் அனுமன் வைத்த நெருப்பால் கொதிப்படைந்தன என்க. (15) |