| 5959. | தேன்அவாம் பொழில் தீப் பட, சிந்திய சோனைமா மலர்த்தும்பி, 'தொடர்ந்து, அயல் போன தீச் சுடர்புண்டரிகத் தடங் கானம் ஆம்' என,வீழ்ந்து, கரிந்தவே.* |
தேன் அவாம்பொழில் - தேன் மிக்க(அந்நகரத்துச்) சோலைகளில்; தீ பட - நெருப்புப் பற்ற (அதனால்); சிந்திய - சிதறிய; சோனைமாமலர் தும்பி - நீருண்ட மேகம் போல மலர்களில் மொய்த்துக் கொண்டிருந்த வண்டுகள்; தொடர்ந்து அயல் போன - அந்தச் சோலைகளைத் தொடர்ந்து அப்பாலும் பரவிச் சென்ற; தீ சுடர் - நெருப்புச் சுடர்களை (கண்டு); புண்டரிகத்தடம் கானம் ஆம் என வீழ்ந்து கரிந்த - பெரிய தாமரைக்காடுஎன்று மாறாகக் கருதி, அவற்றில் போய் விழுந்து கருகிப் போயின. நெருப்புச்சுடரின் மிகுதியான தோற்றத்தை, தாமரைக்காடு என மாறாகக் கருதிய வண்டுகள் அதில் விழுந்து கருகின என்பதாம். (17) |