5961. | பூக்கரிந்து, முறி பொறி ஆய், அடை நாக் கரிந்து,சினை நறுஞ் சாம்பர் ஆய், மீக் கரிந்துநெடும் பணை, வேர் உறக் காக் கரிந்து,கருங் கரி ஆனவே. |
பூ கரிந்து -மலர்கள்கரிந்து போய்; முறி பொறி ஆய் - இளந் தளிர்கள் நெருப்புப் பொறியாய்; அடை நாகரிந்து - இலைகளும், இலைகளின் நடுவில் உள்ள ஈர்க்குகளும் கரியாகி; சினை நறுஞ் சாம்பர் ஆய் மீகரிந்து - சிறு கிளைகள் நல்ல சாம்பலாய் வெந்து அதன் மேலுள்ள மற்றப் பாகங்களும் வெந்து; நெடும் பணை வேர் உற கா கரிந்து - நீண்ட கிளைகளும், வேர்களும் ஒன்றுபட சோலைகள் முழுவதும் கரிந்து போய்; கரும் கரி ஆன - பெரிய கரிக்குவியல்களாக ஆயின. முறி - இளந்தளிர்; அடை - இ்லை; நா இலையின் நடுவில் உள்ள ஈர்க்கு; சினை - சிறுகிளை; நெடும்பணை - பெரிய கிளை; கா - சோலை. (19) |