5962.

கார் முழுக்க எழும் கனல் கற்றை போய்
ஊர் முழுக்கவெதுப்ப உருகின;
சோர் ஒழுக்கம்அறாமையின், துன்று பொன்
வேர் விடுப்பதுபோன்றன, விண் எலாம்.*

     கார் முழுக்கஎழும் கனல் கற்றை - மேகங்களை முழுகச்செய்யும்படிமேலே எழுகின்ற நெருப்பின் தொகுதி; போய் ஊர் முழுக்க வெதுப்ப  -மேற் சென்று, (பொன்மயமான) அமராவதி நகரம்
முழுவதையும் சுட்டெரிக்க;உருகின சோர் பொன் ஒழுக்கம் அறாமையின் -
(அதனால்) உருகிஒழுகுகின்ற பொன்னின் தாரைகள் இடைவிடாது
பெருகுதலால்; விண் எலாம்துன்று வேர் விடுப்பது போன்றன - அவ்வான
நாடு முழுவதும், அடர்ந்தமரத்தின் வேரைக் கீழே இறங்க விடுவது போன்று
விளங்கின.
 

     மேகங்கள்முழுகும்படி எழுந்த தீச்சுடர், பொன் மயமான அமராவதி
நகரை எரிக்க, அது உருகியது. உருகிய பொன் ஒழுக்கு, மரத்தின் வேர்கள்
போன்று விளங்கிற்று என்பதாம்.                              (20)