அரக்கரும்அரக்கியரும் உற்ற அவலம் 5966. | எழுந்துபொன்தலத்து ஏறலின், நீள் புகைக் கொழுந்து சுற்ற,உயிர்ப்பு இலர், கோளும் உற்று அழுந்துபட்டுளர்ஒத்து, அயர்ந்து, ஆர் அழல் விழுந்துமுற்றினர்-கூற்றை விழுங்குவார். |
கூற்றைவிழுங்குவார் - யமனையும் விழுங்கக்கூடியஆற்றல் அமைந்தசில அரக்கர்கள்; எழுந்து பொன் தலத்து ஏறலின் - (அந்த நெருப்புக்குத்தப்பிப் பிழைக்க மேலே) எழுந்து பொன்னுலகமான சுவர்க்கத்துக்கு ஏறும்போது; நீள் புகை கொழுந்து சுற்ற - கொழுந்துவி்ட்டு எழுந்த நீண்ட புகைசுற்றிக் கொண்டதனால்; உயிர்ப்பு இலர் - மூச்சுவிட மாட்டாதவர்களாய்;கோளும் உற்று - அப் புகையையும் உள்ளே கொண்டு விட்டபடியால்;அழுந்து பட்டுளர் ஒத்துஅயர்ந்து - நீருள் அழுந்தியவர்களைப் போல மயக்கமுற்றவர்களாகி; ஆர் அழல் விழுந்து முற்றினர் - நீங்குதற்கு அருமையான நெருப்பில் விழுந்து இறந்தனர். அரக்கர்கள்,மேலே எழ முயன்றும், முடியாமல், புகையால் சூழப்பெற்று, அதில் அழுந்தி மயக்கம் அடைந்து, அந்நெருப்பிலேயே விழுந்து இறந்தனர் என்பதாம். தலம் - இடம்; உயி்ர்ப்பு - மூச்சுவிடுதல்; முற்றினர் - முடிந்தார்கள். (24) |