5991. | சார் அயல்நின்றான், வீரர்விரைந்தார்; 'நேருதும்' என்றார்; தேரினர்சென்றார். |
சார் அயல்நின்றார் - இராவணனைச் சார்ந்துபக்கத்தில் நின்றவர்களாகிய; தேரினர் வீரர் நேருதும் என்றார் - தேர்வீரர்கள் அவ்வாறே செய்வோம்என்று சொல்லி; விரைந்தார் - விரைந்து சென்றார்கள். நேருதல் - உடன்படுதல். (49) |