வஞ்சி விருத்தம் | 5993. | நீர் கெழுவேலை நிமிர்ந்தார்; தார் கெழு தானைசமைந்தார்;- போர் கெழு மாலைபுனைந்தார் ஓர் எழுவீரர்-உயர்ந்தார். |
உயர்ந்தார் ஓர்எழு வீரர் - (அவ்வீரர்களுள்)உயர்ந்தவர்களாகிய ஒப்பற்ற ஏழுவீரர்கள்; நீர் கெழு வேலை நிமிர்ந்தார் - நீர்மிகும் கடல் போல எழுந்தவர்களாய்; போர் கெழு மாலை புனைந்தார் - போர்க்குரிய தும்பை மாலை அணிந்து; தார் கெழு தானை சமைந்தார் - அணிவகுக்கப் பெற்ற சேனையை ஆயத்தம் செய்தார்கள். (51) |