அரக்கர்கள்அனுமனுடன் பொருது அழிதல் | 5995. | 'பற்றுதிர்! பற்றுதிர் !' என்பார்; 'எற்றுதிர் !எற்றுதிர் ! என்பார்; முற்றினர்,முற்றும் முனிந்தார்; கற்று உணர்மாருதி கண்டான். |
முற்றும்முனிந்தார் - மிக்க கோபம் கொண்டஅந்த அரக்கர்கள்; பற்றுதிர் பற்றுதிர் என்பார் - (அனுமனைக் கண்டவுடன்) 'இவனைப் பிடித்துக் கொள்ளுங்கள் பிடியுங்கள்' என்று சொல்பவரும்; எற்றுதிர் எற்றுதிர் என்பார் - 'இவனைத் தாக்குங்கள் தாக்குங்கள்' என்று சொல்பவர்களுமாய்; முற்றினர் - அனுமனை வளைந்து கொண்டார்கள்; கற்று உணர் மாருதி கண்டான் - நூல்களைக் கற்று உணர்ந்த அறிஞனான அனுமன் அவர்களைப் பார்த்தான். (53) |