5996.

ஏல்கொடுவஞ்சர் எதிர்ந்தார்;
கால்கொடுகைகொடு, கார்போல்,
வேல்கொடுகோலினர்; வெந் தீ
வால்கொடு தானும்வளைந்தான்.

     ஏல் கொடுவஞ்சர் - (அனுமனைப்பிடிப்பதற்கு) ஏற்றுக் கொண்டு
வந்த வஞ்சகர்களான அரக்கர்கள்; கார் போல் கோலினர் - மேகம் போல்
அனுமனைச் சூழ்ந்து கொண்டு; கால் கொடு, கை கொடு வேல் கொடு -
காலைக் கொண்டும் கையைக் கொண்டும் வேலைக் கொண்டும்; எதிர்ந்தார்
தானும் -
எதிர்த்தார்கள்; அனுமனும்; வெம்தீ வால் கொடு வளைந்தான் -
வெவ்விய நெருப்பு மூண்ட தனது வாலைக் கொண்டு அவர்களை வளைத்தான்.

     
ஏல் கொடு -ஏற்றுக்கொண்டு.                           (54)