5998.

நூறிடமாருதி, நொந்தார்
ஊறிட, ஊன் இடுபுண்ணீர்,
சேறு இட, ஊர் அடுசெந் தீ
ஆறிட, ஓடினதுஆறாய்.

     மாருதி நூறிடநொந்தார் - அனுமன் அவ்வாறு அடிக்க
வருந்தினவர்களான அரக்கர்கள்; ஊறு இட ஊன் இடு புண்ணீர் சேறு இட
-
காயம் அடைய அதனால், அவர் உடம்பினின்றும் பெருகிய இரத்தமானது,
சேற்றை உண்டாக்க; ஊர் அடு செந்தீ ஆறிட ஆறாய் ஓடினது -
அவ்வூரை எரித்த சிவந்த நெருப்பு தணியும் படி ஆறாகப் பெருகிற்று.

     அனுமனால்மோதுண்ட அரக்கரின் இரத்தப் பெருக்கு பற்றிக்
கூறப்பட்டது.                                                 (56)