5999.

தோற்றினர் துஞ்சினர் அல்லார்
ஏற்று இகல்வீரர், எதிர்ந்தார்;
காற்றின் மகன்,கலை கற்றான்,
கூற்றினும் மும்மடி கொன்றான்.

     துஞ்சினர்அல்லோர் தோற்றினர் ஏறு இகல்வீரர் - இறந்தவர்கள்
போக அங்குத் தென்பட்டவர்களான ஆண்சிங்கம் போன்ற வீரர்கள்;
எதிர்ந்தார் -
அனுமனை எதிர்த்தார்கள்; காற்றின் மகன் கலை கற்றான் -
வாயு தேவன் மகனும் எல்லாக்கலைகளையும் கற்றவனுமாகிய அனுமன்;
கூற்றினும் மும்மடி கொன்றான் -
யமனைவிட மூன்று மடங்கு அவர்களைக்
கொன்றுவிட்டான்.                                           (57)