6000.

மஞ்சு உறழ்மேனியர் வன் தோள்
மொய்ம்பினர்வீரர் முடிந்தார்
ஐம்பதினாயிரர்;அல்லார்,
பைம் புனல் வேலைபடிந்தார்.

     மஞ்சு உறழ்மேனியர் - மேகம் போன்றகருநிறம் கொண்ட உடலை
உடையவர்களும்; வன் தோள் மொய்ம்பினர் - வலிய தோள்களும்
ஆற்றலும் கொண்டவர்களுமான; வீரர் - படை வீரர்களில்; ஐம்பதினாயிரர்
முடிந்தார் -
ஐம்பதினாயிரம் பேர் இறந்தார்கள்; அல்லார் பைம்புனல்
வேலை படிந்தார் -
அவர்கள் அல்லாதவர் எல்லாம் பசுமையாகக்
காணப்படுகின்ற நீரையுடைய கடலில் போய் விழுந்தார்கள்.           (58)