6037.

'வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார்,
                                விண் தோய்,
காலையும்மாலைதானும் இல்லது ஓர் கனகக் கற்பச்
சோலை அங்குஅதனில் உம்பி புல்லினால் தொடுத்த
                                தூய
சாலையில்இருந்தாள்-ஐய !-தவம் செய்த தவம்
    
                                 ஆம் தையல்.

     ஐய ! - ஐயனே !; தவம்செய்த தவம் ஆம் தையல் - தவம்
என்பதுசெய்த தவத்தின் வடிவமாகிய பிராட்டி; வேலையுள் -
கடலினிடையில் உள்ள;இலங்கை என்னும் - இலங்கை என்னும் பெரிய
நகரின் ஒரு புறத்தில்; விரிநகர் ஒரு சார் - நகரின் ஒரு புறத்தில்;
விண்நோய் காலையும் மாலைதானும் இல்லது கனக கற்ப ஓர் சோலை
அங்கு அதனில் -
ஆகாயத்தைஅளாவி வளர்ந்த, காலை, மாலை என்ற
வேறுபாடு இன்றி ஒரே விதமாகவிளங்குகின்ற பொன்மயமான கற்பகத் தருவை
உடைய ஒரு பூஞ்சோலையின்உள்ளே; உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள் -
உன்தம்பி, புற்களைக் கொண்டு வேய்ந்து அமைத்த
அதே பரிசுத்தமானபர்ணசாலையில் தங்கியிருந்தாள்.

     பிராட்டி,இராவணனால் தொடப்படாத கற்புடையவளாக இருக்கின்றாள்
என்பது தெரிவிக்கப்பட்டது. பொன் மயமான கற்பகத் தருக்கள் ஒளிவீசுவதால்,
பகல் இருள் என்ற வேறுபாடு இல்லை சோலையில். அன்றி, மரங்களின்
அடர்த்தியால், சூரிய ஒளி புகாத சோலை என்றும், கொள்ளலாம். 'தவம்
செய்த தவம் ஆம் தையல்' என்பது பிராட்டியின் கற்புத் தவத்தின் சிறப்பை
உணர்த்துகின்றது.                                            (31)