6048.

'ஒரு கணத்துஇரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி,
                          ஆன்ற                    
திரு முலைத்தடத்து வைத்தாள்; வைத்தலும்,
                          செல்வ ! நின்பால்
விரகம்என்பதனின் வந்த வெங் கொழுந் தீயினால்
                          வெந்து
உருகியது; உடனேஆறி, வலித்தது, குளிர்ப்பு உள்
                          ஊற.

     செல்வ ! -எல்லாச்செல்வமும் உடையவனே !; ஒரு கணத்து
இரண்டுகண்டேன் -
ஒரு கணப் பொழுதிலே, ஒன்றற்கு ஒன்று மாறுபாடான
இரண்டுவியக்கத்தக்க நிகழ்ச்சிகளையான் பார்த்தேன்; ஒளி மணி ஆழி -
(அவைஎன்ன எனில்) விளங்குகின்ற இரத்தினம் பதிக்கப் பெற்ற மோதிரத்தை;
ஆன்றதிருமுலைத் தடத்து வைத்தாள் - பிராட்டி, தனது சிறந்த
கொங்கைகளின்மேல் வைத்தாள்; வைத்தலும் - வைத்தவுடன்; நின்பால்
விரகம் என்பதனின்வந்த வெம் கொழும் தீயினால் வெந்து உருகியது -
உன்னிடத்தினின்றும்பிரிந்த விரகதாபம் என்பதனால் உண்டான வெப்பமாகிய
செழித்தநெருப்பினால் சூடேறி உருகிவிட்டது; குளிர்ப்பு உள் ஊற உடனே
ஆறிவலித்தது -
(மோதிரம் உடம்பில் பட்ட மனமகிழ்ச்சியினாலாகிய)
குளிர்ச்சிஉடலில் மிகுதலால் அப்பொழுதே (அவ்வெப்பம் தணிந்து) இறுகிமுன் போல்உறுதிப்பட்டுவிட்டது.

     மோதிரம்,பிராட்டியின் விரகத் தீயால் உருகுதலும், மகிழ்ச்சியாகிய
குளிர்ச்சியால் இறுகுதலும் ஆகிய மாறுபட்ட இரு
 தன்மைகளையும்
ஒருகணத்தில் கண்டேன் என்றதாம். விரகம் - பிரிவால்
நிகழும் காம வேதனை.                                         (42)