6054.

பொடித்தனஉரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்;
                           பொங்கித்
துடித்தன,மார்பும் தோளும்; தோன்றின வியர்வின்
                           துள்ளி;
மடித்தது, மணிவாய்; ஆவி வருவது போவது ஆகித்
தடித்தது, மேனி;என்னே, யார் உளர் தன்மை
                           தேர்வார் ?

     உரோமம்பொடித்தன - (இராமபிரானுக்கு)மயிர்கள் சிலிர்த்தன;
கண்ணீர் போந்து பொழிந்தன - கண்ணீர் வழிந்து பெருகின; மார்பும்
தோளும் பொங்கி துடித்தன -
மார்பும்
 தோள்களும்பூரித்துத்துடித்தன;
வியர்வின் துள்ளி தோன்றின - வியர்வையின் துளிகள் உண்டாயின;
மணிவாய் மடித்தது - அழகிய வாய் இதழ் மடிப்புண்டது; ஆவி வருவது
போவது ஆகி மேனி தடித்தது -
உயிர்வருவதும் போவதும் ஆகப் பெற்று
உடல் பூரித்தது; என்னே ! - என்னவியப்பு; தன்மை தேர்வார் யார் உளர்
? -
அப்போது இராமபிரான் அடைந்த நிலைமையை ஆராய்ந்து
அறியவல்லார் யாரே உள்ளார் ? (ஒருவரும் இல்லை என்பதாம்,)

     இராமபிரானுக்குஅப்பொழுது நேர்ந்த மெய்ப்பாடுகளைத் தெரிந்து
உணர்த்துவது எம்மனோர்க்கு இயலாது என்றபடி. துள்ளி - துளி.      (48)