நாக இலச்சினை யுடைமையால் நாகரெனப் பெயர்பெற்ற
ஒருவகை மக்கள் வாழும் நாடு நாகநாடு என்பர். இந்நாட்டின் பெயர்
பின்னரும் இந்நூலிற் பலவிடத்து வந்துளது. தம, அ-ஆறனுருபு. நீங்கலும்
நீங்கார் என்னும் அடுக்கினுள் பின்னது பொதுவினையாகும் ; முன்பு,
"சுழலலுஞ் சுழலும், ஓடலு மோடும் ஒரு சிறை யொதுங்கி, நீடலும் நீடும்,"
(3 : 111-3) என வந்தமையுங் காண்க.
மாமணிப் பீடிகை, அறத்தகையாசனம், தரும பீடிகை
என்பன ஒரு பொருள்மேல் வந்தன. அழுவோள் முன்னர் பீடிகை தோன்றிய
தென்க.
இவள் இன்னணமாக, மணிபல்லவத்திடைத் துயிலெழும்
அஞ்சி லோதி, போன்று காணாளாய்க் கண்டு திருவே வாவென்று அழுவோள்
முன்னர்த் தரும பீடிகை ஆங்குத் தோன்றியதென்க. |