|
உரை
1--5.மணிமேகலா
தெய்வம் நீங்கியபின்னர்-மணிமேகலா தெய்வம் மந்திரம் அளித்துச் சென்ற
பின்னர், மணிபல்லவத்திடை மணிமேகலைதான்-மணிமேகலை மணிபல்லவத்தின்கண்
உள்ள, வெண்மணற் குன்றமும் - வெள்ளிய மணற் குன்றுகளையும், வீரிபூஞ் சோலையும்
- விரிந்த பூம்பொழில்களையும், தண்மலர்ப் பொய்கையும் - குளிர்ந்த மலர்களையுடைய
பொய்கைகளையும், தாழ்ந்தனள்
|