பக்கம் எண் :

பக்கம் எண் :170

Manimegalai-Book Content
அறவணர்த் தொழுத காதை

108--13. ஆதிமுதல்வன் அருந்துயர் கெடுக்கும் பாதபங்கயமலை பரசினர் ஆதலின்-தீர்த்தற்கரிய துயரத்தை நீக்கும் புத்தனுடைய பாதபங்கய மலையை வணங்கினர் ஆதலின், ஈங்கிவர் இருவரும் இளங்கொடி நின்னோடு-இளங்கொடி போல்வாய இவர் இருவரும் நின்னுடன், ஓங்குயர்போதி உரவோன் திருந்தடி - மிக உயர்ந்த போதியின்கீழ் அமர்ந்த மெய்யறிவுடையோனது திருந்திய அடிகளை, தொழுது வலங்கொண்டு தொடர்வினை நீங்கி - வலங் கொண்டுதொழுது வினைப்பற்றுக்களினின்றும் நீங்கி, பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய் - குற்றமற்ற நல்ல வழியிலே செல்வர் காண்பாய்; உரவோன் - புத்தன் ; உரம் - திண்ணிய அறிவு. பழுதில் நன்னெறி - தூநெறி.

114--21.ஆருயிர் மருந்தாம்-உயிர்களைக் காக்கின்ற அருமருந்தாகிய, அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை - அமுதசுரபி யென்னும் பெருமை பொருந்திய பாத்திரத்தை நீ பெற்றிருக்கின்றாய் ஆகலின், மக்கள் தேவர் என இருசார்க்கும் - மக்கள் தேவர் என்னும் இரு பகுதிகட்கும், ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் - ஒத்த முடிவினையுடைய ஓர் அறத்தைக் கூறுகின்றேன், பசிப்பிணி தீர்த்தல் என்றே - அது பசிப்பிணி தீர்த்தலாம் என்று, அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆகலின்-அறவணவடிகள் மிகப் பெரிய நல்லறத்தைக் கூறினர் ஆதலால், மடுத்த தீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட -மிகுந்த தீயினாற் கொளுத்தப்பட்டாற் போன்ற உயிர்களின் பசியானது அழியுமாறு, எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென் - மணிமேகலை தெய்வக் கடிஞையைக் கையில் எடுத்தனள் என்க.

அவியுணவுடையராகலின் இவ் அறம் தேவர்க்கும் ஒத்ததாயிற்று. அது தீர்த்தலாகும் என விரித்துரைக்க.

இளங்கொடி அவர் தம்முடன் அடிகள் யாங்குளரென்று வினாய்க் குறுகி மாதவனடியை வணங்கி ஏத்தி உரைத்தலும் கேட்டு, அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினராதலின், இளங்கொடி பாத்திரம் எடுத்தனள் என வினை முடிவு செய்க.

அறவணர்த் தொழுத காதை முற்றிற்று.