என்று சொல்ல, அவர்களுள்ளே ஓ ரந்தணன் ''''இவனது பிறப்பினை யான் அறிவேன்,"
எனக் கூறி, முன்பு குமரியாடப் போந்த சாலியைத்தான் கண்டு வினாவி யறிந்த
வரலாற்றை உரைத்து, ''''தூயனல்லாத இவனைத் தொடுதல் செய்யாதீர்,'''' என்ன, ''''தேவ
கணிகையாகிய திலோத்தமை பெற்ற மைந்தர்கள் பெரிய முனிவர்களாக இருத்தல்
கேட்டிலிரோ? சாலிக்குத் தவறு கூறத் துணிந்தீர்களே,'''' என்று கூறி, ஆபுத்திரன்
அவர்களை நோக்கி நகைத்தான்; வளர்த்த பூதியும் அவனை இழிந்தவனென நீக்கிவிட்டான்;
அப்பால் ஆபுத்திரன் பிச்சை யேற்றுண்ணத் தொடங்கிய பொழுது, அந்தணர் பதியிலெல்லாம்
அவனை ஆகவர் கள்வனென்றிகழ்ந்து, அவனது கடிஞையிற் கல்லிடலாயினர் ; அதனால்,
அவன் வேறு புகலின்றித் தென் மதுரையை அடைந்து சிந்தா தேவியின் கோயிலின்
முன்புள்ள அம்பலத்தில் இருந்து கொண்டு, கையிற் கடிஞை யேந்தி மனைதோறும் சென்று
வாங்கிவந்த உணவை,