பக்கம் எண் :

பக்கம் எண் :177

Manimegalai-Book Content
13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
 

ஒருபொருட் பன்மொழி. ஆவானது பாதுகாத்தமையின் இவனுக்கு ஆபுத்திரன் என்பது பெயராயிற்று.

15-20. வயனங் கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் - வயனங்கோடு என்னும் ஊரிலுள்ள ஒரு மறையவன், இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்- இளம்பூதி என்னும் பெயருடையவன் வழியிடை வரும்பொழுது, குழவி ஏங்கிய கூக்குரல் கேட்டு-குழந்தை அழுத கூப்பீட்டொலியைக் கேட்டு, கழுமிய துன்ப மொடு கண்ணீர் உகுத்தாங்கு - கலந்த துன்பத்துடன் கண்ணீர் சொரிந்து, ஆமகன் அல்லன் என் மகன் என்றே-இக்குழந்தை பசுவின் மகன் அல்லன் என்னுடைய புதல்வனே என்று கூறி, காதலி தன்னொடு கைதொழுது எடுத்து - தமக்கு மகப் பேற்றினையளித்த கடவுளைக் கைகூப்பி வணங்கி மனைவியுடன் குழந்தையை எடுத்து ;

பின் காதலி தன்னொடு என்னலால், மனைவியுடன் வருவோன் என்க. இளம்பூதி-இப்பெயர் பூதியெனவே இக் காதையுட் பின்வருகிறது. ஆவானது பாதுகாத்தலைக் கண்டமையின் ''ஆமகனல்லன்'' எனக் கூறினான். நாவிடை - நாவினால். நன்னூல்-வேதன் வேதாங்கம் முதலியன. அக் குழவியைத் தனக்களித்தது தெய்வமென்றெண்ணி அத் தெய்வத்தைத் தொழுதன னென்க.

21--6 நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என-மகன் பிறந்தனன் இனி நன் கிளை பொலிவுறுக என்று, தம் பதிப் பெயர்ந்து தமரொடுங்கூடி - தம் மூரின்கட் சென்று உறவினருடன் கூடி, மார்பிடை முந்நூல் வனையா முன்னர்-மார்பின்கண் முந்நூல் அணிதற்கு முன்னரே, நாவிடை நன்னூல் நன்கணம் நவிற்றி - நாவினால் மறைகளை நன்கு பயிலச் செய்ய, ஓத்துடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் - மறையோதும் அந்தணர்கட்குப் பொருந்துவன அனைத்தையும், நாத்தொலைவின்றி நன்கனம் அறிந்தபின் - சொல்வன்மை குன்றாமல் நன்குணர்ந்த பின்னர் ;

முந்நூல் - பூணுநூல், விரைவுபற்றி வனையா முன்னர் என்றார். நாவிடை - நாவால்.நவிற்றி - கவிற்றி வென்க. நவிற்றுதல் - அடிப்படப் பயில்வத்தல். நாத் தொலைவின்றி-நாவானது தோற்றல் இல்லையாக; பிறிதோர் சொல் வெல்லுஞ் சொல் இன்மையறிந்து சொல்ல வல்லனாக என்றபடி.

27--34. அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின் புக்கோன்- அவன்  அவ்வூரில் ஒரு மறையவன் வீட்டினுட்சென்றவன், ஆங்குப் புலை சூழ் வேள்வியில்-அவ்விடத்தில் ஊனுண்ணுதலைக் கருதுகின்ற வேள்விச் சாலையில், குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி-தொடுக்கப்பட்ட நிறமமைந்த மாலை கொம்பின்கண் சுற்றப்பட்டு, வெரூஉப் பகை அஞ்சி வெய் துயிர்த்துப் புலம்பி - அச்சத்தைத் தருகின்ற பகைக்கு அஞ்சி வெவ்விதாக மூச்செறிந்து