14.
பாத்திர மரபு கூறிய காதை
|
[ஆபுத்திரன்
அங்ஙனமிருக்கையில் ஒரு நாள் அவனுக்கு நிகழ்ந்தனைக் கூறுவேன் ; கேட்பாயாக
: ஒருநான் நள்ளிரவில் அவன் துயிலும் பொழுது சிலர் வந்து ''வயிறு காய் பெரும்பசி
எங்களை வருத்தா நின்றது'' என்றனர். அதனைக் கேட்ட அவன் அத் துன்பத்தை
மாற்றுதற்கு ஆற்றலின்றி வருத்த முற்றான் ; அப்பொழுது கலை நியமத்துள்ள சிந்தாதேவி
வெளிப்பட்டு வந்து, ''இதனைக் கொள்க ; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு
வறுமையுறாது; எவ்வளவு கொடுப்பினும் இதில் உணவு குறையாது வளராநிற்கும்'' என்றுரைத்துத்
தன் கையினுள்ள அட்சய பாத்திரமொன்றை அவன் கையிற் கொடுத்தனள் ; அவன்
அதனைப் பெற்ற மகிழ்ச்சியுற்று,
|
|
"சிந்தா தேவி ! செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கே ! நாமிசைப் பாவாய் !
வானோர் தலைவி ! மண்ணோர் முதல்வி !
ஏனோ ருற்ற இடர் களைவாய்"
|
என்று பரவிப் பணிந்து, பசியால் வருந்தி வந்தோரை ஊட்டி மகிழ்வித்து,
அன்றுமுதல்
எல்லா உயிர்க்கும் உணவளிப்பானாயினன் ; உண்பதற்காக மக்கள் பலர் அவனைச்
சூழ்ந்துகொண்டனர் ; விலங்குகளும் பறவைகளும் அவனைப் பிரிவின்றிச் சூழ்ந்துகொண்டன
; அவ்வாறு நிகழும்போது, அவனது அறத்தின் மிகுதியைத் தனது பாண்டு கம்பள நடுக்கத்தால்
அறிந்த இந்திரன் ஒரு முதுமறையோன் வடிவுகொண்டு வந்து நின்ற, "நான் இந்திரன்
; நினது பெரிய தானத்தின்பொருட்டு வரங்கொடுத்தற்கு வந்தேன் ; நீவிரும்பியது
யாது?" என்று கூற, ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும்படி சிரித்து,
|
|
"அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்
நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்
யாவரு மில்லாத் தேவர்நன் நாட்டுக்
கிறைவ னாகிய பெருவிறல் வேந்தே
|
வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கி, அவர்தம் இனிய முகத்தைக் காணுமாறு
செய்யும் என் தெய்வக் கடிஞை ஒன்றே சாலும்; நின்பாற் பெறத் தக்கது யாது?"
என அவனை மதியாதுரைத்தனன் ; உரைக்கவே இந்திரன் வெகுண்டு, உலகிலே பசியால்
வருந்துவோ ரில்லையாம்படி செய்வேன் என நினைந்து, எங்கும் மழை பெய்வித்து வளமுண்டாகச் செய்தனன் ; அதனால் பசித்து வருவோர் இலராயினர். அதுகண்டு ஆபுத்திரன்
அவ் வம்பலத்தினின்றும் நீங்கி ஊர்தோறுஞ் சென்று, ''உண்போர் யாரேனும் உண்டோ?''
என வினவா |
|