பக்கம் எண் :

பக்கம் எண் :278

Manimegalai-Book Content
20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை

காண்பாய், கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன - கழு நீர் மலரனைய கண்கள் வழுவாகிய நீரைச் சுமந்தன காண். குமிழ்மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ-குமிழம் பூப்போலும் மூக்காகிய இவை உமிழுகின்ற சீயைச் சொரிவனகாண், நிரை முத்தனைய நகையும் காணாய் சுரை வித்து ஏய்ப்பப் பிறழ்ந்து வேறாயின - வரிசைப் படுத்திய முத்துக்களைப் போன்ற பற்களும் சுரைவிதையைப் போலப் பிறழ்ந்து வேறுபட்டன காண்பாய், இலவிதழ்ச் செவ்வாய் காணோயோ நீ புலவுப் புண்போல் புலால் புறத்திடுவது - முருக்கமலர்போன்ற சிவந்த வாய் புலால்நாற்றம் பொருந்திய புண்ணைப்போல் தீநாற்றத்தை வெளியிடுவதை நீ காணோயா, வள்ளைத் தாள்போல் வடிகாது இவை காண்உள்ளூன் வாடிய உணங்கல் போன்றன-வள்ளைத் தண்டுபோல் வடிந்த காதுகளாகிய இவைகள் உள்ளிருந்த ஊன் வாடிய வற்றலைப் போன்றிருப்பன பாராய், இறும்பூது சான்ற முலையும் காணாய் வெறும்பை போல வீழ்ந்து வேறாயின - வியப்பு மிக்க கொங்கைகளும் உள்ளீடில்லாத பையைப் போல வீழ்ந்து வேறுபட்டன காண்பாய், தாழ்ந்து ஒசி தெங்கின் மடல்போல் திரங்கி வீழ்ந்தன இளவேய்த் தோளுங் காணாய் - இளைய மூங்கில் போன்ற தோள்களும் தாழ்ந்து வளைந்த தென்னை மடல்போல் திரைந்து வீழ்ந்தன காணாய், நரம்பொடு விடுதோல் உதிர்தொடர் கழன்று திரங்கிய விரல்கள் இவையும் காணாய் - நரம்புடன் தோலும் நகத்தின் தொடர்ச்சியைக் கழன்று திரைந்த விரல்களாகிய இவற்றையும் காண்பாய், வாழைத் தண்டே போன்ற குறங்கிணை தாழைத் தண்டின் உணங்கல் காணாய் - வாழ்த் தண்டு போன்ற துடைகளிரண்டும் தாழைத் தண்டுபோல் வற்றியிருத்தலைக் காண்பாய், ஆவக் கணைக்கால் காணாயோ நீ மேவிய நரம்பொடு என்பு புறங்காட்டுவ - அம்புப் புட்டிலைப் போன்ற கணைக்கால்கள் தம்மிடம் பொருந்திய நரம்பினையும் என்பினையும் வெளியே காட்டுவனவற்றை நீ காணவில்லையோ, தளிரடிவண்ணம் காணாயோ நீ முளி முதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல்-தளிர்போலும் அடிகளின் வண்ணம் முதிர்ந்த தென்னையில் உலர்ந்து உதிர்ந்த காயின்வற்றல் போன்றிருப்பதை நீ காணாயோ, பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து-மலராலும் சாந்தாலும் புலால் நாற்றத்தை மறைத்து, தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த - ஆடையாலும் அணிகலனாலும் முன்னோர் அமைத்த, வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என - வஞ்சத்தைத் தெரிந்துகொள்வாய் இளங்கோனே என்று, விஞ்சை மகளாய் மெல்லியல் உரைத்தலும் -மணிமேகலை காயசண்டிகை வடிவத்துடன் கூறுதலும்;

நரைமை - வெண்மை. தகையின்றாயது-தன்மையதாயது என்றுமாம். மூக்கின்றுளை நோக்கி ''இவை''யெனப்பட்டன. உமிழ்சீ-வெறுக்கத்தக்க