மெய்த்திறம்-மெய்ந்நூல் வகை ;
1
"யாமெய்யாக்
கண்டவற்றுள்" என்பதில், மெய்-மெய்ந்நூலென்னும் பொருட்டாதல் அறிக.
2
;"மெய்த்திறம்
வழக்கென விளம்புகின்ற, எத்திறத்தினு மிசையா திவருரை" என மேல் வருவதனாலும்
இப் பொருள் அறியப்படும். நன்பொருள் வீடு என்பவற்றை ஒன்றாயடக்கி,
3
;"அருமறை
விதியு முலகியல் வழக்கும், கருத்துறை பொருளும் விதிப்பட நினைந்து" என்றார்
கல்லாட ஆசிரியர். அகலாராகி எய்திய கடவுளாளர் என்க. வானவ ருருவினை மக்கள்
கண்கள் காணப்பொறா வென்பதனை
4
"அந்தரத்
துள்ளோ ரறியா மரபின், வந்து காண்குறூஉம் வானவன் விழவும்"
"
அவளுக்குப், பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன், மூவா விளநலங்காட்டி"
என்பவற்றானறிக. ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்பவற்றை,
5
"அமைச்சர்
புரோகிதர் சேனாபதியர், தவாத்தொழிற்றூதுவர் சாரண ரென்றிவர், பார்த்திபர்க்
கைம்பெருங் குழுவெனப் படுமே,"
6
"கரணத்
தியலவர் கரும விதிகள், கனகச் சுற்றங் கடைக்காப்பாளர், நகர மாந்தர்
நளிபடைத் தலைவர், யானை வீர ரிவுளி மறவர், இனைய ரெண்பே ராய மென்ப"
என்னுஞ் சூத்திரங்களா னறிக.
18--26. வான்பதி தன்னுள் - தேவர் நகரமாகிய அமராபதியில்,
கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம் விடுத்த
பூதம்-
கொடியெடுத்த தேர்ப்படையினையுடைய முசுகுந்த மன்ன
ற்குப் பகைவரால் நேர்ந்த துன்பத்தினை நீக்கிய
நாளங்கா
டிப்பூதம், விழாக்கோள் மறப்பின் - விழாவெடுத்தலை
மறந்தால், மடித்த செவ்வாய் வல் எயிறு
- இலங்க -
சினத்தான் மடிக்கப்பெற்ற சிவந்த வாயில் வலிய
பற்கள்
விளங்க, இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
- இடியொலி போன்ற முழக்கத்துடன் துன்பஞ் செய்யும்,
தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப் புடைத்து
உணும்
பூதமும் பொருந்தாதாயிடும் - இம் முதுநகரில் அல்லவை
செய்யும் பாவிகளைக் கையிற்கொண்ட பாசத்தாற்
பிணித்துப்
புடைத்து உண்ணுஞ் சதுக்கப்பூதமும் பகைமை கொள்ளும்
;
ஆகலின், மாயிரு ஞாலத்து அரசு தலைஈண்டும் - மிகப்பெரிய
புவியின்கண் உள்ள அரசரெல்லாரும் வந்து செறிதற்
கேதுவாகிய,
ஆயிரங் கண்ணோன் விழா - இந்திரனுக்குச் செய்யும்
விழாவினை, கால் கொள்க என - தொடங்குகவென்று
சொல்ல ;
துயரம்-அவுணர் விட்ட இருட்கணையால் உண்டாகிய துன்பம்.
விடுத்த-முசுகுந்தற்கு ஓர் மந்திரத்தை யருளி அவ்விருளைப் போக்கிய. பூதம்-புகார்நகரின்
பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் இரண்டிற்கும் நடுவாகிய நாளங்காடி யிடத்துள்ள
பூதம். இவ்வரலாற்றினை,
7
;"கடு
1
குறள். 200.
2
மணி. 27: 106-7.
3
கல். 66.
4
சிலப். 6: 72-3.
5
சிலப். 9: 33-5. து
6
திவாகரம்.
7
சிலப். 6: 7-13.
|