பக்கம் எண் :

பக்கம் எண் :384

Manimegalai-Book Content
26. வஞ்சிமா நகர் புக்க காதை

[மணிமேகலை வான்வழியாக வஞ்சிமாநகரை யடைந்து அங்கே கண்ணகிக்கும் கோவலற்கும் எடுக்கப்பட்டுள்ள கோயிலையடைந்து அவர் படிமங்களை வணங்கிப் பரவினாள்; கண்ணகி திருமுன் நின்று கண்ணீர் சொரிந்து, அக் கண்ணகியார் கற்புக்கடன் பூண்டு தன்கடன் முடித்த திறத்தைத் தெரிவிக்குமாறு வேண்டினாள்; அவட்குக் கண்ணகியார், மதுரையைத் தாம் அழற்படுத்திய காலையில், மதுராபதியெனும் அந்நகர்த் தெய்வம்தோன்றித் தமது பண்டைப் பிறப்பு வரலாற்றைக் கூறி அப்போது நேர்ந்த சாபத்தால் தமக்கு இத்தீங்கு நேர்ந்தது என்று சொல்லியும் தாம் அந்நகரைத் தீயிட்ட சினப்பாவம் தம்மை எவ்வகையாலும் பற்றா தொழியாதென்றும், அதனால் தாம் பன்முறையும் பிறந்தும் இறந்தும் முடிவில் கபிலநகரடைந்து, புத்த தருமங் கேட்டுத் தவம் பூண்டு, புத்தன் தோன்றி யறமுரைக்கும் காலத்தே, அவனது, புத்தவிகார மேழனையும் ஏத்தித் துன்பப் பிறவி நீங்கி அறங்கேட்டுத் பிறவிநீத்த பெற்றியினைப் பெறல் கூடுமென்றும், அக்காலத்தே இருத்தியும் பல செய்யப்படுமென்றும் சொல்லி, "நீ இவ் வஞ்சிநகர்க்கண்ணே அவ்வச் சமயத்தவர் கூறும் பொருள்களைக் கேட்டு அவற்றின் மெய்ம் மையின்மையைத் தேர்ந்து, புத்த தருமங் கேட்டுப் பிடகநெறி கடவா தொழுகுவாய்,'' என்றும் தெளிவித்து, மேலும்கூறலுற்று, ''நீ இளையளென்றும் பெண்ணென்றும் கருதிச் சமயக் கணக்கர் பலரும் நின்னொடு உரையாடா திகழ்வராதலால், நீ வேற்றுருக்கொள்க" என்றும் உரைத்தார். மணிமேகலையும் அவ்வாறே தனக்கு மணிமேகலா தெய்வம் தந்த மந்திரத்தை யோதி வேற்றுருக் கொண்டு, முனிவரும் கற்றோரும் புலவரும் கூடியிருக்கும் வஞ்சிநகர்ப் புறச்சேரி யடைந்து தனக்கு அறங்கேட்டற்குரிய ஏது நிகழ்ச்சியும் நால்வகை வாய்மை மேற்கோடற்குரிய பொருத்தமும் அமைந்தமையால் அங்கே தங்கினாள். (கண்ணகி கோவலர்களின் முற்பிறப்பு வரலாறு 11-31 அடிகளிலும், சேரன் செங்குட்டுவன் வடவாரிய மன்னரை வென்ற வெற்றி நலம் 77-90 அடிகளிலும் கூறப்படுகின்றன.)]

5

அணியிழை யந்தர மாறா வெழுந்து
தணியாக் காதற் றாய்கண் ணகியையுங்
கொடைகெழு தாதை கோவலன் றன்னையுங்
கடவு ளெழுதிய படிமங் காணிய
வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து

வணங்கி நின்று குணம்பல வேத்தி
அற்புக்கட னில்லாது நற்றவம் படராது
கற்புக்கடன் பூண்டு நுங்கடன் முடித்தது