[மணிமேகலை வஞ்சிநகர்க்கண் இருந்து பல்வகைச் சமய வாதிகளையும் கண்டு, அவரவர்
சமயப் பொருட்களைக் கேட்க விரும்பி அவர்பாற் சென்று, அளவை வாதி முதல்
பூத வாதி யீறாகவுள்ள அவரனைவரையும் வினவ, அவர்கள் தம் சமயக் கருத்துக்களை
யுரைத்தனர். (இதன் கண் 5-85 அடிகளில் அளவை வாதமும், 89-95 அடிகளில் சைவ
வாதமும், 96-104 அடிகளில் பிரம வைணவ வேத வாதங்களும், 110-165 அடிகளில்
ஆசீவக வாதமும், 171-201 அடிகளில் நிகண்ட வாதமும், 202-239 அடிகளில் சாங்கிய
வாதமும், 242-262 அடிகளில் வைசேடிக வாதமும், 264-268 அடிகளில் பூதவாதமும்
கூறப்படுகின்றன.)]
5
10
15
20 |
நவையறு நன்பொரு ளுரைமி னோவெனச்
சமயக் கணக்கர் தந்திறஞ் சார்ந்து
வைதிக மார்க்கத் தளவை வாதியை
எய்தின ளெய்திநின் கடைப்படி யியம்பென
வேத வியாதனுங் கிருத கோடியும்
ஏதமில் சைமினி யெனுமிவ் வாசிரியர்
பத்து மெட்டு மாறும் பண்புறத்
தத்தம் வகையாற் றாம்
1
பகர்ந்
திட்டனர்
காண்டல்
2
கருத
லுவம மாகமம்
3
ஆண்டைய
வருத்தா பத்தி யோடியல்பு
ஐதிக மபாவ மீட்சி யொழிவறிவு
எய்தியுண் டாநெறி யென்றிவை தம்மாற்
பொருளி னுண்மை புலங்கொளல் வேண்டும்
மருளில் காட்சி யைவகை யாகும்
கண்ணால் வண்ணமும் செவியா லோசையும்
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவாற்
சுவையு மெய்யா லூறுமெனச் சொன்ன
இவையிவை கண்டுகேட் டுயிர்த்துண் டுற்றுத
துக்கமுஞ் சுகமுமெனத் துயக்கற வறிந்து
உயிரும் வாயிலு மனமுமூ றின்றிப்
பயிலொளி யொடுபொரு ளிடம்பழு தின்றிச்
சுட்ட றிதல்கவர் கோட றோன்றாது |
|