பக்கம் எண் :

பக்கம் எண் :398

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
 




60





65





70





75





80





85




 

கொள்ளத் தகுவது காந்தமெனக் கூறல்
எட்டுள பிரமா ணாபா சங்கள்
சுட்டுணர் வொடுவிரி யக்கோட லையந்
தேராது தெளிதல் கண்டுண ராமை
 எய்து மில்வழக் குணர்ந்ததை யுணர்தல்

நினைப்பென நிகழ்வசுட் டுணர்வெனப் படுவது
எனைப்பொரு ளுண்மை மாத்திரை காண்டல்
திரியக் கோட லொன்றையொன் றென்றல்
விரிகதி ரிப்பியை வெள்ளியென் றுணர்தல்
ஐய மென்ப தொன்றை 1 நிச்சயியா

மையற் றறியோ மகனோ வென்றல்
தேராது தெளிதல் செண்டு வெளியில்
ஓராது தறியை மகனென வுணர்தல்
கண்டுண ராமை 2 கடுமாப் புலியொன்று
அண்டலை முதலிய கண்டுமறி யாமை

இல்வழக் கென்பது முயற்கோ டொப்பன
சொல்லின்மாத் திரத்தாற் கருத்திற் றோன்றல்
உணர்ந்ததை யுணர்த லுறுபனிக் குத்தீப்
புணர்ந்திடல் மருந்தெனப் புலங்கொள நினைத்தல்
நினைப்பெனப் படுவது காரண நிகழாது

நினக்கிவர் தாயந் தந்தையு மென்று
பிறர்சொலக் கருதலிப் பெற்றிய வளவைகள்
பாங்குறு முலோகா யதமே பௌத்தஞ்
சாங்கியம் நையா யிகம்வை சேடிகம்
மீமாஞ் சகமாஞ் சமயவா சிரியர்

தாம்பிரு கற்பதி சினனே கபிலன்
அக்க பாதன் கணாதன் சைமினி
மெய்ப்பிரத் தியமனு மானஞ் சாத்தம்
உவமான மருத்தா பத்தி யபாவம்
இடையே யிப்போ தியன்றுள வளவைகள்

என்றவன் றன்னைவிட்டிறைவ னீசனென
நின்ற சைவ வாதிநேர் படுதலும்
பரசுநின் றெய்வ மெப்படித் தென்ன

1 நிச்சயியாது. 2 கடுமருப்புலியி லோர்ந்து.