தொழில் உதவி வளந்தந்தது என - மழை பெயலைச் செய்து உலகிற்கு வளத்தைத் தந்ததுபோல
உணவுதந்து ; பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச் செல்லுங்காலை - தமது பசி
நோயை நீக்கிய பாவைபோலும் மணிமேகலையை வணங்கி வாழ்த்திக் கொண்டு அவரனைவரும்
திரும்பிச் செல்லுங் காலத்தில் ;
தக்கார்க்குச்
செய்த அறம் சிறதாயினும் பெரும்பயன் விளைப்பது போலச்சுரபியிலிட்ட சிறுசோறு
கொடுக்கக் குறைபடாது மிக்குப்பெருகிற் றென்றற்குப், ''''பெருந்தவர்கைபெய் பிச்சையின்பய''''னை
யுவமங் காட்டினார்'''' பெருந்தவர் கைபெய் பிச்சை பெருகுதலைப் பிறரும், ''''அறப்
பயனும், தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால், வான் சிறிதாப் போர்த்து
விடும்'''' (நாலடி : 38) என்பது காண்க. முன்பும் ''''அறத்தி னீட்டிய வொண்பொரு
ளறவோன், திறத்து வழிப்படூஉஞ் செய்கைபோல, வாங்குகை வருந்த மன்னுயிர்க்
களித்துத், தான்தொலை வில்லாத் தகைமை'''' (17:3-6) யுடையது இச்சுரபி என்றது
காண்க. கருவி, ஏர் முதலாயின வித்துவமம், சுரபியின் தகைமையைக் காட்சியின்
வைத்து விளக்கியவாறு. வசி-மழை. மறுவலும் பாவையென்றார், இவ்வாற்றால் உவகையும்
வியப்பும் கொள்ளாமை தோன்ற.
235--45. தாயர் தம்முடன் அல்லவை கடிந்த அறவணவடிகளும்-
மாதவியும் சுதமதியும் அறனல்லவற்றை நீக்கிய அறவணரும், மல்லல் மூதூர் மன்னுயிர்
முதல்வி நல்லறச்சாலை நண்ணினர் சேறலும் - வளமிக்க பழைமை பொருந்திய நகரத்தின்கண்
நிலைபெற்ற உயிர்களின் முதல்வியாகிய மணிமேகலை உணவளிக்கும் அறச்சாலையை
வந்தடைதலும், நன்றென விரும்பிச் சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி நல்லடி
கழுவி - வரவுணர்ந்த மணிமேகலை நன்றென விரும்பி எழுந்து சென்று அவர்தம் திருவடிகளைப்
பணிந்து நீரால் அவர் அடிகளை விளக்கி, ஆசனத்தேற்றி அறுசுவை நால்வகைப் போனகம்
ஏந்தி - நற்றவிசிலிருத்தி அறுசுவையினை யுடைய நான்குவகைப்பட்ட திருவமுதினை
ஏந்தி, பொழுதினிற் கொண்டபின் - உண்டற்குரிய காலமெய்த அவர்கள் உண்ட
பின்னர்; பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து - பசிய வெற்றிலையும் பாக்கும்
கருப்பூரமும் அளித்து, வாய்வதாக என் மனப்பாட்டு அறம் என மாயைவிட்டு இறைஞ்சினள்
மணிமேகலை என் - என் மனத்தின்கணுளதாகிய அறமானது பலித்திடுக என்று கூறி வேற்
றுருவினின்றும் நீங்கி அறவணவடிகளை மணிமேகலைவணங்கினள்.
காண்டல்
வேட்கை மிக்குடையரா யிருந்தமையின், ''''தாயர் தம்முடன்'''' என்றார். மணிமேகலை
வரவால் நகரம் அல்லல் நீங்கி மல்லலுற்றமை தோன்ற, ''''மல்லல் மூதூர்'''' என்றும்,
பசி மிகுதியால் உயிராகிய முதல் அது நின்றவுடம்பினின்றும் நீங்கும் நிலையிலிருப்ப,
உண்டி தந்து நிற்கப்பண்ணிய மாண்புபற்றி, மணிமேகலையை, ''''மன்னுயிர்
|