தன்றொழில்களால் துன்பமுண்டாமோ எனச் செயலற்று
ஏங்கி,
உண்ணா நோன்போடு-உண்ணா விரதத்துடன், உயவல்
யானையின் மண்ணா மேனியன் வருவோன் தன்னை-வருந்து
தலையுடைய யானையைப்போல வருவோனுமாகிய கழுவாத
உடலையுடைவனை, வந்தீர் அடிகள் நும் மலரடி தொழுதேன்
-
வாரும் அடிகேள் நும்முடைய மலர்போலும் திருவடிகளை
வணங்கினேன், எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ
எம்
முடைய பெருமானே அடியேன் மொழியைக்
கேளும், அழுக்குடை
யாக்கையில் புகுந்த நும் உயிர் - அழுக்குச்
செறிந்த உடலின்
கட் புகுந்த நும்முடைய உயிரானது, புழுக்கறைப்
பட்டோர்
போன்று உளம் வருந்தாது - புழுக்கத்தினைத்
தரும் அறையில்
அகப்பட்டோரைப்போல உள்ளம் வருந்தா வண்ணம்,
இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும்
தன் வயின்
தரூஉம் என் தலைமகன் உரைத்தது-எம் தலிவருரைத்ததாகிய
இம்மை யின்பத்தினையும் மறுமை யின்பத்தினையும்
முடிவில்
லாத முத்தி யின்பத்தினையும் தன்னிடத்திருந்து தருகின்றதான,
கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின் விளைபூந்
தேறலின்
- சொழுவிய மடல்களையுடைய தென்னையின் கண் விளைகின்ற
இனிய மதுவில் கொலையென்பதும் உண்டோ?,
மெய்த் தவத்
தீரே - உண்மைத் தவமுடைய அடிகளே, உண்டு
தெளிந்து இவ்யோகத்து உறுபயன் கண்டால் - இதனை
உண்டு
தெளிவு பெற்று இத் தவநெறியில் இதனின் மிக்க
பயனைக்
கண்டால், எம்மையும் கையுதிர்க் கொண்மென -
தேறலையன்றி
எம்மையும் அகற்றிவிடும் என்று கூறி, உண்ணா நோன்பி
தன்னொடும் சூளுற்று - உண்ணா நோன்பியாகிய சைன
முனிவருடன் சபதங் கூறி, உண்ம் என் இரக்கும்
ஓர் களிமகன்
பின்னரும் - உண்ணும் என்று இரக்கின்ற
ஒரு கட்குடியன்
பின் நிற்போரும் ;
சிமிலி-உறி. கரண்டை - கரண்டகம்; குண்டிகை;
1
"கல்பொளிந்தன்ன
விட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி" என்பது காண்க. அராந்தாணம்
- அருகத்தானம். வந்தீரடிகள், எந்தமடிகள், மெய்த்தவத்தீர் எனக் களிமகன்
பலகாற் கூறுவது இகழ்ச்சி. மண்ணா மேனியன் ஆகலின் அழுக்குடை யாக்கை என்றான்.
தலைமகன்-ஆசான். கொலையுமுண்டோ என்றது கொலையொன்றுமே கடியற்பாலதென்பதனை
உடன்பட்டபடி. தெங்கின் விளைபூந் தேறல் என்றது தேறலின் தூய்மை கூறியபடியாம்.
இவ் யோகத்து - நும்முடைய தவத்தில். இதனினும் உறுபயன் என விரிக்க. இனி,
யோகம் - தேறலின் சேர்க்கை யென்றுமாம் : இதற்கு, கண்டால் அகற்றும் என்றது
கண்டபின் அகற்றகில்லீர் என்னும் குறிப்பிற்று. கையுதிர் கொள்ளுதல்-கையை
------------------------------------------------------------------------------
1
மதுரை, 482-3.
------------------------------------------------------------------------------
|