பக்கம் எண் :

பக்கம் எண் :51

Manimegalai-Book Content
4 பளிக்கறை புக்க காதை
 


70





75





80





85





90





95





100
நெஞ்சிறை கொண்ட நீர்மையை நீக்கி
வெம்பகை நரம்பின் என்கைச் செலுத்தியது

இதுயா னுற்றி இடும்பை யென்றலும்
மதுமலர்த் தாரோன் மனமகிழ் வெய்தி
ஆங்கவள் தன்னையென் அணித்தே ரேற்றி
ஈங்கியான் வருவேன் என்றவற் குரைத்தாங்கு
ஓடுமழை கிழியும் மதியம் போல

மாட வீதியின் மணித்தேர் கடைஇக்
காரணி பூம்பொழிற் கடைமுகங் குறுகவத்
தேரொலி மாதர் செவிமுதல் இசைத்தலும்
சித்திர பதியோ டுதய குமரனுற்
றென்மேல் வைத்த உள்ளத் தானென

வயந்த மாலை மாதவிக் கொருநாள்
கிளந்த மாற்றம் கேட்டே னாதலின்
ஆங்கவன் தேரொலி போலும் ஆயிழை
ஈங்கென் செவிமுதல் இசைத்ததென் செய்கென
அமுதுறு தீஞ்சொல் ஆயிழை யுரைத்தலும்

சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல்
பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுகென்
றொளித்தறை தாழ்கோத் துள்ளகத் திரீஇ
ஆங்கது தனக்கோர் ஐவிலின் கிடக்கை
நீங்காது நின்ற நேரிழை தன்னைக்

கல்லென் தானையொடு கடுந்தேர் நிறுத்திப்
பன்மலர்ப் பூம்பொழிற் பகன்முளைத் ததுபோல்
பூமரச் சோலையும் புடையும் பொங்கரும்
தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம்
அரசிளங் குமரன் ஆருமில் ஒருசிறை

ஒருதனி நின்றாய் உன்றிற மறிந்தேன்
வளரிள வனமுலை மடந்தை மெல்லியல்
தளரிடை யறியுந் தன்மையள் கொல்லோ
விளையா மழலை விளைந்து மெல்லியல்
முளையெயி றரும்பி முத்துநிரைத் தனகொல்

செங்கயல் நெடுங்கண் செவிமருங் கோடி
வெங்கணை நெடுவேள் வியப்புரைக் குங்கொல்