பக்கம் எண் :

பக்கம் எண் :66

Manimegalai-Book Content
5. மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை


75





80





85





90





95





100





105

அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்

அறக்கதி ராழி திறப்பட உருட்டிக்
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபா ராட்டுத லல்லது யாவதும்
மிகைநா வில்லேன் வேந்தே வாழ்கென
அஞ்சொ லாழியை நின்திற மறிந்தேன்

வஞ்சி நுண்ணிடை மணிமே கலைதனைச்
சித்திரா பதியாற் சேர்தலு முண்டென்
றப்பொழி லாங்கவன் அயர்ந்து போயபின்
பளிக்கறை திறந்து பனிமதி முகத்துக்
களிக்கயல் பிறழாக் காட்சிய ளாகிக்

கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டியென்
றிகழ்ந்தன னாகி நயந்தோ னென்னாது
புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத் தியற்கை

இதுவே யாயிற் கெடுதன் றிறமென
மதுமலர்க் குழலாள் மணிமே கலைதான்
சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள்
இந்திர கோடணை விழாவணி விரும்பி
வந்து காண்குறுஉ மணிமேகலா தெய்வம்

பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகி
மணியறைப் பீடிகை வலங்கொண் டோங்கிப்
புலவன் றீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோ யென்கோ
குற்றங் கெடுத்தோய் செற்றஞ் செறுத்தோய்

முற்ற உணர்ந்த முதல்வா என்கோ
காமற் கடந்தோய் ஏம மாயோய்
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ
ஆயிர வாரத் தாழியன் றிருந்தடி
நாவா யிரமிலேன் ஏத்துவ தெவனென்

றெரிமணிப் பூங்கொடி இருநில மருங்குவந்
தொருதனி திரிவதொத் தோதியி னொதுங்கி
நிலவரை யிறந்தோர் முடங்குநா நீட்டும்