மந்திரங் கொடுத்த காதை

       



60
மறவண நீத்த மாசறு கேள்வி
அறவண னாங்கவன் பாற்சென் றோனை
ஈங்கு வந்தீர் யாரென் றெழுந்தவன

பாங்குளி மாதவன் பாதம் பணிதலும



57
உரை
60

       மறவணம் நீத்த மாசறு கேள்வி அறவணன் ஆங்கவன்பால் சென்றோனை - பாவத்தன்மைகளைத் துறந்த குற்றமற்ற கேள்வியினையுடைய அறவணன் என்னும் மாதவன் துச்சயனிடம் வந்தோனை, ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன்பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும்-துச்சயன் ஈண்டு வந்தீராகிய நீவிர் யார் என எழுந்து அம் முனிவனுடைய இயல்பினை நினைந்து அவன் திருவடிகளை வணங்குதலும்.
       சென்ற அறவணனையென மாறுதலுமாம். "மறவண நீத்த மாசறு கேள்வி, அறவண வடிகள்" (2: 60-1.) என முன்பு வந்தமையுங் காண்க. எழுந்தவன்-எழுந்தோன் என்றுமாம், பாங்கு-இயல்பு, சிறப்பு, உளி-உள்ளி.