மந்திரங் கொடுத்த காதை

       
50




55
இன்னுங் கேளாய் இலக்குமி நீநின்
தவ்வைய ராவோர் தாரையும் வீரையும்
ஆங்கவர் தம்மை யங்கநாட் டகவயின்
கச்சய மாளுங் கழற்கால் வேந்தன்
துச்சய னென்போன் ஒருவன் கொண்டனன்

அவருட னாங்கவன் அகன்மலை யாடிக்
கங்கைப் பேரியாற் றடைகரை யிருந்துழி


50
உரை
56

       இன்னும் கேளாய் இலக்குமி நீ-இலக்குமி நீ இன்னும் கேட்பாயாக, நின் தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் - நின் முற் பிறந்தோர் தாரையும் வீரையும் ஆவர், ஆங்கவர் தம்மை - அவர்களை, அங்கநாட்டு அகவயின் - அங்கநாட்டினுள்ளதாகிய, கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் - கச்சய நகரத்தை ஆண்ட வீரக் கழலணிந்த காலையுடைய வேந்தனாகிய, துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்-துச்சயன் என்னும் பெயருடைய ஒருவன் மணந்தனன், அவருடன் ஆங்கவன் அகன்மலை ஆடி - அம் மன்னவன் அம் மகளிருடன் அகன்ற மலைப்பக்கங்களில் விளையாடி, கங்கைப்பேரியாற்று அடைகரை இருந்துழி - கங்கையாற்றின் அடைகரையில் இருந்தபொழுது ;

       குதவ்வை - தமக்கை ; 1"செய்யவள், தவ்வையைக் காட்டிவிடும்" என்பது காண்க.

1 குறள். 197