பாத்திரம் பெற்ற காதை

5 காவதந் திரியக் கடவுட் கோலத்துத்
தீவ திலகை செவ்வனந் தோன்றிக்
கலங்கவிழ் மகளிரின் வந்தீங் கெய்திய்

5
உரை
8

       கடவுட் கோலத்துத் தீவதிலகை செவ்வனம் தோன்றி-தெய்வ வேடமுடைய தீவதிலகை என்பாள் செவ்விதாகத் தோன்றி, கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய - மரக்கலம் கவிழப்பெற்று அதினின்றும் உய்ந்துவந்த மகளிரைப்போல் ஈண்டுவந்து சேர்ந்த, இலங்குதொடி நல்லாய் யார் நீ என்றலும் - விளங்குகின்ற வளையல்களை யணிந்த மெல்லியலே நீ யார் என வினவுதலும் ;
       தீவதிலகை : இந்திரன் ஏவலாற் புத்தன் பாத பீடிகையைப் பாதுகாத்துக்கொண்டு மணிபல்லவத்தில் இருப்பவள்; தீவுக்குத் திலகம் போன்றவள் என்றது பொருள். தனித்து ஓர் தீவில் வந்திருத்தலின் 'கலங்கவிழ் மகளிர் போல்' என்றாள். செவ்வனம்-நேரே யென்றுமாம்