பாத்திரம் பெற்ற காதை




135
தந்தில் அவர்க்கோர் அற்புதங் கூறும்
இரவி வன்மன் ஒருபெரு மகளே
துரகத் தானைத் துச்சயன் தேவி
அமுத பதிவயிற் றரிதில் தோன்றித்
தவ்வைய ராகிய தாரையும் வீரையும்
அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன

132
உரை
137

       அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் - அவ்விடத்தில் அவர்கட்கு ஓர் அற்புதத்தைக் கூறுவாள், இரவிவன்மன் ஒரு பெருமகளே - இரவிவன்மனுடைய ஒப்பற்ற பெரிய மகளே, துரகத்தானைத் துச்சயன் தேவி-குதிரைச் சேனைகளையுடைய துச்சயனுடைய மனைவியே, அமுதபதி வயிற்று அரிதில் தோன்றி- அமுதபதியின் வயிற்றின்கண் அரிதாகப் பிறந்து, தவ்வையா ஆகிய தாரையும் வீரையும்-எனக்குத் தமக்கையராகிய தாரையும் வீரையுமாய நீவிர், அவ்வையர் ஆயினீர்-இப்பிறப்பில் எனக்குத் தாயர் ஆயினீர், நும் அடி தொழுதேன் - நும்முடைய அடிகளை வணங்கினேன் ;

       
தேவி - மாதவி ; சுதமதியுமாம். தவ்வையர் - தமக்கைமார். அவ்வையர் - தாய்மார் ; மாதவிக்குத் தோழியாகலின் செவிலி யென்பது பற்றிச் சுதமதியையும் தாய் என்றாள்.