பாத்திரம் பெற்ற காதை



55




60
என்றவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி
மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித்
தீவ திலகை தன்னொடுங் கூடிக்
கோமுகி வலஞ்செய்து கொள்கையின் நிற்றலும்
எழுந்துவலம் புரிந்த இளங்கொடி செங்கையில்
தொழுதகை மரபிற் பாத்திரம் புகுதலும்
பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்
மாத்திரை யின்றி மனமகிழ் வெய்தி

53
உரை
60

       என்று அவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி-என்று தீவதிலகை மொழிதலும் மணிமேகலை அதனை விரும்பி, மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி-பெருமை மிக்க பீடத்தைக் கும்பிட்டு வணங்கி, தீவதிலகை தன்னொடும் கூடி-தீவதிலகை யொடுஞ் சேர்ந்து, கோமுகி வலஞ்செய்து கொள்கையின் நிற்றலும்-கோமுகிப் பொய்கையை வலம்வந்து நியமத்தோடு நிற்றலும், எழுந்து வலம் புரிந்த இளங்கொடி செங்கையில் தொழும் தகை மரபிற் பாத்திரம் புகுதலும்-அனைவரும் தொழத்தக்க மரபினையுடைய மாபெரும் பாத்திரம் பொய்கையினின்றும் எழுந்து வலம் புரிந்து நின்ற மணிமேகலையின் சிவந்த கைகளிற் புகுதலும், பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள் மாத்திரை இன்றி மனமகிழ்வு எய்தி-பாத்திரத்தைப் பெற்ற மணிமேகலை அளவின்றி மனமகிழ்ச்சி யடைந்து ;

       
பாத்திரம் எழுந்து செங்கையிற் புகுதலும் என்க.