அறவணர்த் தொழுத காதை


100




105
அந்நாள் பிறந்தவன் அருளறங் கேட்டோர்
இன்னாப் பிறவி யிகந்தோர் ஆகலின்
போதி மூலம் பொருந்திய சிறப்பின்
நாதன் பாதம் நவைகெட ஏத்துதல்
பிறவி தோறும் மறவேன் மடக்கொடி
மாதர் நின்னால் வருவன இவ்வூர்
ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள
ஆங்கவை நிகழ்ந்த பின்னர் அல்லது
பூங்கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்

99
உரை
107

       அந்நாட் பிறந்தவன் அருளறம் கேட்டோர் - அந்நாளில் பிறந்த புத்தனது அருளறத்தைக் கேட்டோர்கள், இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின் - துன்பந்தரும் பிறவியைக் கடந்தவர்கள் ஆகலினால்; போதி மூலம்பொருந்திய சிறப்பின்-அரசமரத்தடியிலமர்ந்த சிறப்பினையுடைய, நாதன் பாதம் நவைகெட ஏத்துதல் - தலைவன் திருவடிகளைக் குற்றம் நீங்குமாறு துதித்தலை, பிறவி தோறும் மறவேன் மடக்கொடி - மடக்கொடியே யான் பிறவி தோறும் மறவேன், மாதர் நின்னால் வருவன இவ்வூர் ஏதுநிகழ்ச்சி யாவும் பலவுள-நங்காய் நின்னால் இவ்வூரில் உண்டாவனவாகிஏது நிகழ்ச்சிகள் பல உள்ளன, ஆங்கவை நிகழ்ந்த பின்னர் அல்லது - அவை நிகழ்ந்த பின்பன்றி, பூங்கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்-பூங்கொடிபோலும் மாதே அறவுரை கேளாய்;

       
அருளறம் - தயாதன்மம்; அருளிய அறம் என்றுமாம். மறவேல் எனப் பிரித்துரைத்தலுமாம். ஏது நிகழ்ச்சி என்பதுபற்றி முன்னர் (3 : 4) உரைத்தமை காண்க. மாதர் என்பன விளி. பொருளுரை - மெய்யுரை : ஈண்டு அறவுரை; பொருள்-மெய்மையாதலை 1"பொய்யில் புலவன் பொருளுரை" $"பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்" என்பவற்றானும், 2"பொருள் சேர் புகழ்" என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையாணும் அறிக.
1 மணி. 22: 61. $சிலப். 28: 168. 2 குறள். 2: 5.