ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

       

85




90
பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க்
காவதங் கடந்து கோவலர் இருக்கையின்
ஈன்ற குழவிக் கிரங்கே னாகித்
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்
செல்கதி யுண்டோ தீவினை யேற்கென்
றல்லலுற் றழுத அவள்மகன் ஈங்கிவன்
சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின்
புல்லலோம் பன்மின் புலைமகன் இவனென


84
உரை
91

       பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க் காவதம் கடந்து கோவலர் இருக்கையின் - பொற்றேரினை யுடைய பாண்டியனது கொற்கை நகரத்தில் ஒரு காவதம் கடந்த பின்னர் ஆயர்களுடைய இருப்பிடத்தில், ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி-ஈன்ற சிறு குழவிக்கு இரங்காதவளாய்; தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன் - கண்காணாத தோட்டமொன்றில் இட்டு வந்தேன், செல்கதி உண்டோ தீவினையேற்கு என்று - இத்தகைய தீவினையேனுக்குச் செல்கதியும் உண்டோ என்று, அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கிவன்-துன்பமுற்று அழுத அச் சாலியின் மகன் இவன், சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின்-இதனைக் கூறாமலிருந்தேன் அங்ஙனம் கூறுவதால் பயன் இல்லாமையின்,
      புல்லல் ஓம்பன்மின் புலைமகன் இவன் என - இவனைத் தீண்டாதொழிவீராக அசுத்தமுள்ள கீழ்மகனிவன் என்று கூற ;
 
        ஈன்றேன் ; அங்ஙனம் ஈன்ற குழவிக்கு எனவும், அழுதாள் ; அங்ஙனம் அழுத அவள் மகன் எனவும் அறுத்துரைக்க. செல்கதி-அடையக் கடவதாகிய நற்கதி. அந்தணன் உரைப்பவன் புலைமகன் இவனென்று கூறவென்க. ஓம்பன்மின் - பாதுகாவாதீர் ; செய்யாதீர் என்றபடி.